மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ. 99,300 கோடி ஒதுக்கீடு- நிர்மலா சீதராமன்

0

மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ. 99,300 கோடி ஒதுக்கீடு- நிர்மலா சீதராமன்

புதுடெல்லி, 2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் வாசித்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* கல்வித் துறைக்கு ரூ. 99,300 கோடி ஒதுக்கீடு

* ஆசிரியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்களுக்கு வெளிநாட்டில் பெரும் தேவை உள்ளது. அவர்களின் திறன்கள் தேவைக்கு ஏற்ப பொருந்தவில்லை, எனவே திறன் மேம்பாட்டுக்கு அரசு ரூ.3000 கோடி ஒதுக்கீடு.

* வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும், பட்டப்படிப்பு அளவிலான ஆன்லைன் புரோக்ராம் அறிமுகம் செய்யப்படும்.