மதுரை சினிப்ரியா தியேட்டர் முன் அதிமுக-வினர் போராட்டம்! – ‘சர்கார்’ காட்சிகள் ரத்து

0
336

மதுரை சினிப்ரியா தியேட்டர் முன் அதிமுக-வினர் போராட்டம்! – ‘சர்கார்’ காட்சிகள் ரத்து

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம், எதிர்ப்பார்த்த அளவுக்கு படம் பெரிதாக இல்லை, என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதற்கிடையே, படத்தில் பேசப்பட்டிருக்கும் அரசியல் மூலம் அதிமுக அரசை விஜயும், படமும் விமர்சித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் சிலர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இன்று அதிமுக தொண்டர்கள் பலர், தமிழகம் முழுவதும் ‘சர்கார்’ ஓடும் திரையரங்கங்கள் முன்னிலையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், மதுரை அண்ணா நகரில் உள்ள சினிபிரியா திரையரங்கம் முன்பு அதிமுக-வினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா ஆகிய திரையரங்குகளில் ‘சர்கார்’ படத்தின் பிற்பகல் 2.30 காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது போல, தமிழகத்தின் மேலும் சில திரையரங்குகளிலும் சர்கார் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.