போலியான நபர் மீது மானநஷ்ட வழக்கு..! பட்டுக்கோட்டை பிரபாகர் உறுதி..!!

0

போலியான நபர் மீது மானநஷ்ட வழக்கு..! பட்டுக்கோட்டை பிரபாகர் உறுதி..!!

காப்பான் படக் கதைத் திருட்டு புகார் தொடர்பான மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, இயக்குநர் கே.வி.ஆனந்த் மற்றும் கதாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய கதாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர், பெரிய பட்ஜெட் படங்கள் மீது மட்டுமே, கதைத் திருட்டு புகார்கள் எழுவதாகவும், இதன் பின்னணியை யார் வேண்டுமானாலும் எளிதில் அறிந்து கொள்ள முடியும் எனவும் சூசகமாகப் பேசினார்.

இதுவரை 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருவதாகவும், தனது கதைகளில் ஏதாவது ஒன்றை காப்பி என்று நிரூபித்தால், எழுதுவதை நிறுத்த தயார் என்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் அப்போது தெரிவித்தார்.