பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போடுங்கள்! நடிகர் சத்யராஜ் வற்புறுத்தல்

0
11

பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போடுங்கள்! நடிகர் சத்யராஜ் வற்புறுத்தல் #Unite2FightCorona

நடிகர் சத்யராஜ் கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும்போது ‘’சில வேதனையான விஷயங்களை கேள்விப்படுகிறேன். யாரும் சரியாக தடுப்பூசி போட்டுக்கொள்வதில்லை. செல்போன் வந்த பிறகு நமக்கு நாமே மருத்துவர் ஆகி விட்டோம். அக்கம் பக்கத்தினர், சொந்தக்காரர்கள், நண்பர்கள் அனைவருமே மருத்துவர்கள். ஆனால் மருத்துவத்துக்கு படித்தவர்கள்தான் மருத்துவர்களாக இருக்க முடியும். எனவே தடுப்பூசி பற்றி குழப்பம் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள். அவர்கள் சரியான அறிவுரை வழங்குவார்கள்.

நமது உடம்புக்கு ஒன்றும் வராது என்று காலரை தூக்கி விடுவது எல்லாம் இருக்கட்டும். நம்மை விட மருத்துவர்களுக்கு நமது உடம்பை பற்றி நன்றாக தெரியும். அதற்காகத்தான் அவர்கள் மருத்துவம் படித்து இருக்கிறார்கள். முககவசம் அணிவது, தனி மனித இடைவெளி, கிருமி நாசினி மூலம் கையை சுத்தப்படுத்துவது எல்லாம் அனைவரும் செய்கிறார்கள். ஆனால் தடுப்பூசி விஷயத்தில் குழப்பம் இருக்கிறது. தயவு செய்து மருத்துவர்களை அணுகி அறிவுரை பெற்று தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்’’ என்று கூறியுள்ளார்.