பொதுப்பணித்துறையில் புதிதாக கோயமுத்தூர் மண்டலம் உருவாக்கம்; தமிழக அரசு அரசாணை வெளியீடு

0
75

பொதுப்பணித்துறையில் புதிதாக கோயமுத்தூர் மண்டலம் உருவாக்கம்; தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை, பொதுப்பணித்துறையில் சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் உருவாக் கப்பட்டுள்ளது. இந்த புதிய மண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்கள் இடம் பெறுகிறது.

கோவை பொதுப்பணித்துறை மண்டலத்தில் பணியாற்ற புதிய பணியிடங்களையும் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, திருச்சி, மதுரை ஆகிய மண்டலங்கள் உள்ள நிலையில் கோவை மண்டலமும் இப்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மறு சீரமைப்புக்கு பிறகு பொதுப்பணித்துறையின் கீழ் மொத்தம் 4 மண்டல அலுவலகங்கள், 13 வட்ட அலுவலங்கள், 56 கோட்ட அலுவலகங்கள் மற்றும் அதை சார்ந்த உபகோட்ட அலுவலகங்கள் மற்றும் பிரிவு அலுவலகங்கள் இயங்கும்.