பொதுத் தேர்தல் 2019 தகவல் துளிகள்: தென்காசி (தனி) தொகுதி ஒரு பார்வை

0

பொதுத் தேர்தல் 2019 தகவல் துளிகள்: தென்காசி (தனி) தொகுதி ஒரு பார்வை

சென்னை ஏப்ரல் 09, 2019

 2008-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சங்கரன் கோவில் (தனி) வாசுதேவ நல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாக தென்காசி (தனி) மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட திரு. எம் சங்கரபாண்டியன் 1,25,821 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 50.97 சதவீதமாகும்.
 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட திரு.எம் பி சாமி 1,65,169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 51.15 சதவீதமாகும்.
 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட திரு. ஆர் எஸ் ஆறுமுகம் 1,66,737 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 41.52 சதவீதமாகும்.
 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட திரு. ஏ.எம்.சி. நல்லசாமி 2,23,182 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 55.48 சதவீதமாகும்.
 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட திரு. எம் அருணாசலம் 3,05,069 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 69.23 சதவீதமாகும்.
 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் (இ) வேட்பாளராகப் போட்டியிட்ட திரு.எம் அருணாசலம் 2,72,260 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 62.42 சதவீதமாகும்.
 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. எம் அருணாசலம் 3,60,517 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 68.09 சதவீதமாகும்.
 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. எம் அருணாசலம், 3,93,075 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 62.50 சதவீதமாகும்.
 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. எம் அருணாசலம் 3,81,721 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 63.56 சதவீதமாகும்.
 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் த மா கா (மூ) வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. எம் அருணாசலம் 2,90,663 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 44.98 சதவீதமாகும்.
 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. எஸ் முருகேசன் 2,70,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 41.84 சதவீதமாகும்.
 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட திரு.எஸ் முருகேசன் 2,39,241 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 35.88 சதவீதமாகும்.
 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. எம் அப்பாதுரை 3,48,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 48.87 சதவீதமாகும்.
 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட திரு பி லிங்கம் 2,81,174 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 37.70 சதவீதமாகும்.
 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட திருமதி எம் வசந்தி 4,24,586 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 42.31 சதவீதமாகும்.
 2014-ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதியில் நோட்டாவிற்கு 14,492 வாக்குகள் கிடைத்தன.

2019 ஆண்டு பொது தேர்தல் குறிப்பு:
 26/03/2019 ஆம் தேதி நிலவரப்படி இந்த தொகுதியில் மொத்தம் 14,88,944 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 7,32,490 பேர் ஆண்கள், 7,56,376 பேர் பெண்கள் மற்றும் 78 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.