பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல: வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் கீதா ரவிச்சந்திரன்

0
71

பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல: வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் கீதா ரவிச்சந்திரன்

Chennai: சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் தெலுங்கானா ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் திருமதி. கீதா ரவிச்சந்திரன்  பேசுகையில், தன்னம்பிக்கை மட்டுமே பெண்களை முன்னேற்றம் என்றும், தாயாகிய பெண் மட்டுமே குடும்பத்தை பாரத்தை சுமக்கிறார். அவர்தான் குடும்பத்தை வழிநடத்துகிறார் என்றும் தெரிவித்தார். பெரும்பாலான குடும்பத்தில் அம்மாதான் முதுகெலும்பு என்று தெரிவித்த அவர், பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல என்று வலியுறுத்தி பேசினார்.
தொடர்ந்து பேசிய திரைப்பட நடிகர் திரு. சந்தோஷ் பிரதாப், தாம் பெண்கள் முன்னேற்றத்தை விரும்புவதால் தான், தனது படங்களில் கூட நடிகைகளுக்கு முக்கியத்துவம் தருவதாக கூறினார். ஆண்களை விட பெண்களுக்கே சக்தி அதிகம் என்று தாம் நம்புவதாக கூறினார். பெண்ணாதிக்கம் என்பது ஆணும் பெண்ணும் சமமே ஆகும் என்று கூறினார்.

தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையே நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் திரு. மா. அண்ணாதுரை அனைவரையும் வாழ்த்தி பேசினார். இயக்குனர் குருபாபு பலராமன் நன்றியுரை வழங்கினார்.