புத்தகத் திருவிழாவில் மழை வெள்ளத்தில் மூழ்கிய புத்தகங்கள்! தரமான அடிப்படை வசதிகள் செய்து தர மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்!!

0
252

புத்தகத் திருவிழாவில் மழை வெள்ளத்தில் மூழ்கிய புத்தகங்கள்! தரமான அடிப்படை வசதிகள் செய்து தர மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்!!

கரூர் திருமாநிலையூரில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழா அரங்குகளில் மேற்கூரைவழியாக மழைநீர் கொட்டியுள்ளது. கடைகளுக்குள் ஒரு அடி உயரம் வரை வெள்ளம் நுழைந்ததில் ஏராளமான புத்தகங்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டு, புத்தகப் பதிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.

https://twitter.com/maiamofficial/status/1564190443184615424?s=20

புத்தகத் திருவிழா நடத்தும் நல்லதொரு நிகழ்வை முன்னெடுத்த கரூர் மாவட்ட நிர்வாகமானது, புத்தகங்களைக் காட்சிப்படுத்தும் அரங்குக்கு ஒழுகாத கூரை அமைக்கத் திட்டமிடாதது வியப்பளிக்கிறது. இனியாவது, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடத்தும் புத்தகக் கண்காட்சிகளில் நூல்கள் சேதமடையாத வகையில், தரமான கூரைகளை அமைத்து, தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.