புதுதில்லியில் உலக உணவுத் திருவிழா

0

புதுதில்லியில் உலக உணவுத் திருவிழா

உணவு பதப்படுத்தும் துறையில் உள்ள அனைத்து உலகளாவிய மற்றும் உள்நாட்டு பங்குதாரர்களின் மிகப்பெரிய சந்திப்பாக உலக உணவுத் திருவிழா-2019 இருக்கும் என்று மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் திருமதி. ஹசிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார். இந்த உணவுத் திருவிழா புதுதில்லியில் நவம்பர் 1 முதல் 4 வரை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

வளர்ச்சிக்கான கூட்டமைப்புகளை உருவாக்குவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோளாகும்.

உலக உணவுத் திருவிழா 2019-க்கான ஏற்பாடுகள் முன்னதாகவே துவங்கிவிட்டதாகவும், மேலும் 11-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் 8 உள்நாட்டு கண்காட்சி நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற அமைச்சகங்கள் இடை ஆலோசனை கூட்டத்திற்கு தலைமையேற்று பேசிய திருமதி. ஹசிம்ரத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

உலக அளவில் உணவு பதப்படுத்தும் துறையை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை உலக உணவுத் திருவிழாவை நடத்தி வருகிறது. இத்திருவிழா 2017-ல் தொடங்கப்பட்டு மாபெரும் வெற்றி அடைந்தது.

2017-ல் நடத்தப்பட்ட உலக உணவுத் திருவிழாவில் இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், நிதியமைச்சர், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் 75,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றதுடன், வர்த்தக நிறுவனங்கள் இடையே 8,000 கூட்டங்கள் நடத்தப்பட்டு 14 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.