புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய விண்மீன் திரள் பற்றி தெரியுமா..?
லண்டன்: இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட விண்மீன் திரள்களில் (Galaxy) மிகப்பெரிய விண்மீன் திரள் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியிலிருந்து சுமார் 300 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இந்த விண்மீன் திரள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதற்கு ‘அல்சியோனஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்மீன் திரள் ஏறக்குறைய 1.63 கோடி ஒளியாண்டுகள் அளவிற்கு பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நம்முடைய பூமி அமைந்துள்ள பால்வழி விண்மீன் திரள் சுமார் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய அளவில் இருந்தாலும் அல்சியோனஸ் விண்மீன் திரளும் நம்முடைய விண்மீன் திரள் போன்ற பண்புகளையே கொண்டுள்ளது.
ஐரோப்பாவில் உள்ள குறைந்த அதிர்வெண் வரிசை (LOFAR) மூலம் சேகரிக்கப்பட்ட தரவைப் பயன்படுத்தி மிகப்பெரிய ரேடியோ விண்மீன் திரள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விண்மீன் திரள் நம்முடைய சூரியனின் நிறையைப் போல் 240 மடங்கு நிறை கொண்டது. மேலும் அந்த விண்மீன் திரளின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை (Black Hole) ஒன்று இருப்பதாகவும் அதன் நிறை சூரியனின் நிறையைப் போல் 400 மடங்கு அதிகமானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.