புகையிலை விளம்பரம் – மன்னிப்புக் கேட்டார் நடிகர் அக்‌ஷய் குமார்

0
93

புகையிலை விளம்பரம் – மன்னிப்புக் கேட்டார் நடிகர் அக்‌ஷய் குமார்

புகையிலை விளம்பரத்தில் நடித்ததற்கு, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நடிகர் அக்‌ஷய்குமார் விமல் எலைசி என்ற பான் மசாலா புகையிலை விளம்பரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பு அவர் புகையிலை தொடர்பான விளம்பரங்களில் நடிக்கமாட்டேன் என தெரிவித்திருந்தார். தற்போது அந்த விளம்பரத்தில் நடித்ததால், முன்பு பேசியதை சுட்டிக்காட்டி, அக்‌ஷய் குமாருக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

இதனால், புகையிலை விளம்பரத்திலிருந்து பின்வாங்குவதாக அக்‌ஷய் குமார் அறிவித்துள்ளார். இந்த விளம்பரத்திற்காக, தனக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை, நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில், விளம்பரங்களை தேர்ந்தெடுப்பதில் கவனமுடன் செயல்படுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே புகையிலை விளம்பரத்தில் நடிக்க அல்லு அர்ஜூன் மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த விளம்பரத்தில் நடித்தால், தனது ரசிகர்கள் புகையிலையை பயன்படுத்துவதற்கு, தானே வழி அமைத்து கொடுத்தது போல ஆகிவிடும் என்பதால், அந்த விளம்பரத்தை மறுத்துவிட்டதாக அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.