பீட்டர் பாலின் முதல் மனைவியின் குற்றச்சாட்டுகள்… விமர்சனங்களுக்கு லைவ்வில் விளக்கமளித்த வனிதா விஜயகுமார்

0

Vanitha Vijayakumar | LIVE | பீட்டர் பாலின் முதல் மனைவியின் குற்றச்சாட்டுகள்… விமர்சனங்களுக்கு லைவ்வில் விளக்கமளித்த வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார் – பீட்டர் பால் திருமணம் கடந்த 27-ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. இதையடுத்து அடுத்த நாளே பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தனது கணவர் முறையாக விவாகரத்து பெறாமல் திருமணம் செய்து கொண்டதாக, மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். மேலும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பீட்டர் பால் ஒரு பெண் பித்தர், குடிகாரர் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.

பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் கொடுத்த புகார் குறித்து விளக்கமளித்த வனிதா விஜயகுமார், சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் பணத்திற்காக அவர் புகார் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். ஆனாலும் இத்திருமணம் குறித்து ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் அடித்து வந்த நிலையில் தனது யூடியூப் சேனலில் லைவ்வாக வந்து விளக்கமளித்துள்ளார்.

வனிதாவின் இந்த வீடியோவை ஒரே நேரத்தில் 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.