பிறந்த நாளுக்கு யாருமே வராததால் கவலைப்பட்ட சிறுவன்… வாகனங்களில் அணிவகுத்து வந்து வாழ்த்திய போலீசார்

0

பிறந்த நாளுக்கு யாருமே வராததால் கவலைப்பட்ட சிறுவன்…

வாகனங்களில் அணிவகுத்து வந்து வாழ்த்திய போலீசார்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. 7.10 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நோய் அறிகுறி உள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருப்பர்கள் என பல லட்சம் மக்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க முடியாமல் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளன.

ந்நிலையில், கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக பிறந்தநாள் விழாவிற்கு யாரும் வராததால் கவலையில் இருந்த ஒரு சிறுவனுக்கு, போலீசார் வாகனங்களில் அணிவகுத்து வந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.