பிரதமர் மோடி சென்னை வர வாய்ப்பு: முதல்வர் நலம் பெற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிரார்த்தனை

0

பிரதமர் மோடி சென்னை வர வாய்ப்பு: முதல்வர் நலம் பெற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிரார்த்தனை

புது தில்லி: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனால், தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர வாய்ப்பு உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து தகவல் அறிந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் ஜெயலலிதா நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதே போல, மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு உள்ளிட்டோரும், முதல்வர் ஜெயலலிதா நலம் பெற தாங்கள் இறைவனை பிரார்த்தித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.