பிரதமர் மோடியை ஜனாதிபதி எனக்குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாகும் இம்ரான்கான்

0

பிரதமர் மோடியை ஜனாதிபதி எனக்குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாகும் இம்ரான்கான்

நியூயார்க், ஐக்கிய நாடுகள் அவையின் 74-வது பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார். தனது உரையின் போது, இந்தியப் பிரதமர் மோடியை இந்திய ஜனாதிபதி மோடி என இம்ரான்கான் குறிப்பிட்டது சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், இந்தியாவை பற்றியே தனது பேச்சில் அதிகம் பேசிய இம்ரான் கான் வழங்கப்பட்ட 15-20 நிமிடங்களை தாண்டி நீண்ட நேரம் பேசினார்.

இம்ரான்கான் , பொது மேடைகளில் தவறாக பேசுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே, இந்த ஆண்டு துவக்கத்தில் ஈரான் சென்ற போதும், ஜெர்மனியும் பிரான்சும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன என்று கூறுவதற்கு பதிலாக ஜெர்மனியும் ஜப்பானும் என்று குறிப்பிட்டது நகைப்புக்குள்ளாக்கப்பட்டது.