‘பிக் பாஸ்’ புகழ் ஓவியாவுடன் ஜோடி சேறுகிறார் இளையதளபதி விஜய்: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்!

0

‘பிக் பாஸ்’ புகழ் ஓவியாவுடன் ஜோடி சேறுகிறார் இளையதளபதி விஜய்: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்!

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் `மெர்சல்’.

இளையதளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்குகிறார். இப்படத்தில் இளையதளபதி விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளதால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இளையதளபதி விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர்.

எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வருகிற 20-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் நாளை ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் போஸ்டருடன் வெளியிட்டிருக்கிறது.

‘மெர்சல்’ படத்தின் ‘ஆளப்போறான் தமிழன்’ சிங்கிள் டிராக்கிற்காக இளையதளபதி ரசிகர்கள் மாஸ் வெயிட்டிங்கில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பாடலாசிரியர் விவேக் வரிகளில் ஆளப்போறான் தமிழன் என்ற வரிகளில் தொடங்கும் அந்த பாடல் நாளை ரிலீசாக இருப்பதாக வெளியான அறிவிப்பால் இளையதளபதி விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனர்.

அந்த பாடல் இளையதளபதி விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனிபோடும் வகையில், தற்போது இன்னொரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

அந்த இன்ப அதிர்ச்சி…. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் இளையதளபதி விஜய் நடிக்கவிருப்பதாகக் கூறப்படும் படத்திற்காக ‘பிக் பாஸ்’ புகழ் ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

‘ஸ்பைடர்’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸும், ‘மெர்சல்’ படத்தில் இளையதளபதி விஜய்யும் தற்போது பிஸியாக இயங்கி வருகிறார்கள். இந்தப் படங்கள் முடிவடைந்ததும், இவர்கள் இருவரும் இணைந்து மூன்றாவது முறையாக புதிய படம் ஒன்றிற்காக கூட்டணி அமைக்கவிருக்கிறார்களாம். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பொருட்டு, தற்போதைய ‘டிரென்டிங் தேவதை’யான பிக் பாஸ் புகழ் ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

ALSO READ:

Vijay’s single from Mersal ready for release