‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஒவியா வெளியேற்றம்?

0

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஒவியா வெளியேற்றம்?

சென்னையை அடுத்த பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்காக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. வீடு போன்று அமைக்கப்பட்டுள்ள அந்த அரங்கில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாரும் விசாரணை நடத்தினர்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்த மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் இதுகுறித்து போலீசார் விசாரித்தனர். ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை, அவர் சற்று மனஅழுத்தத்தில் உள்ளதாகவும், அவருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஓவியா உள்ளே இருக்கிறாரா என்று பார்க்க முடியுமா? என்று போலீசார் கேட்டதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, நடிகை ஓவியா படப்பிடிப்பு தளத்தில் உள்ளாரா? அல்லது வெளியில் உள்ளாரா? என்ற கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக ஓவியா – ஆரவ் இடையே காதல் விவகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மனதளவில் கொஞ்சம் பாதிக்கப்பட்டிருக்கிறார் ஓவியா. இந்தவாரம் அவர் நீக்கப்படும் பட்டியலில் இருக்கிறார்.

கைதேர்ந்த மனோதத்துவ நிபுணர்களும் வந்து இதுவரை நான்கு முறை கவுன்சிலிங் கொடுத்துவிட்டார்கள். இருந்தும் ஓவியாவின் மன அழுத்தம் குறையவே இல்லை. இதையடுத்து “நான் வீட்டுக்குப் போறேன்” என்று சொல்லும் ஒவியா நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல். இன்று மாலை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து கமலை சந்திப்பார் என்று தகவல் கசிந்துள்ளது.

கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் சூடு பிடிக்க என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒவியாவுக்கு உண்மையில் என்ன ஆச்சு? என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.