பாலிவுட் நட்சத்திரங்களுடன் மோடி கலந்துரையாடல்: உபாசனா வேதனை

0

பாலிவுட் நட்சத்திரங்களுடன் மோடி கலந்துரையாடல்:

ராம் சரணின் மனைவி உபாசனா வேதனை

புதுடெல்லி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
தலைநகர் டெல்லியில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மகாத்மா காந்தியை பற்றிய குறும்படம் ஒன்றையும் வெளியிட்டார்.இதில், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான், நடிகைகள் கங்கனா ரணாவத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தயாரிப்பாளர் போனிகபூர், ஏக்தா கபூர், இம்தியாஸ் அலி உள்பல பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, காந்தியின் போதனைகளை பரப்புவதில் திரைத்துறை பெரும் பங்காற்றி வருகிறது. 1947 வரையிலான சுதந்திரப் போராட்ட எழுச்சியையும், 1947 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான நாட்டின் வளர்ச்சியையும் திரைத்துறை எடுத்துரைக்க வேண்டும் என தெரிவித்தார்.உரையாடலுக்கு பிறகு, பிரதமர் மோடியுடன் பாலிவுட் நடிகர் நடிகைகள் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர்.

உபாசனா வேதனை

சமீபத்தில் பாலிவுட் நட்சத்திரங்களை சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணின் மனைவி உபாசனா, தனது வேதனையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

” டியரஸ்ட் நரேந்திர மோடி ஜி , தென்னிந்தியாவில் இருக்கும் நாங்கள் உங்களை மிகவும் மதிக்கிறோம். உங்களை பிரதமராக கொன்டதற்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். ஆனால் பெரிய ஆளுமைகள் , பழைய கலாச்சார அடையாளங்களின் பிரதிநிதித்துவம் இந்தி நடிகர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. தென்னிந்திய சினிமா முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகவே நாங்கள் உணர்கிறோம். நான் என் உணர்வுகளை மிகவும் வேதனையுடன் இங்கே வெளிப்படுத்துகிறேன். இது சரியான மனநிலையில் ஆக்கப்பூர்வமான முறையில் எடுக்கப்பட்டதாகவே நம்புகிறேன்… ஜெய்ஹிந்த்..!”-

என்று குறிப்பிட்டுள்ளார், உபாசனா…