பாலியல் புகார்- ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு

0
34

சென்னை: ‘ஆன்லைன்’ வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் (வயது 59) கைது செய்யப்பட்டார். ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜூன் 8 ஆம் தேதி வரை அதாவது 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.