பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்திய மாயாஜாலக் கலைஞர், பரிதாபமாகப் பலி

0

பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்திய மாயாஜாலக் கலைஞர், பரிதாபமாகப் பலி

மேற்குவங்காளத் தலைநகரைச் சேர்ந்த பிரபல மாயாஜாலக் கலைஞரான சாஞ்சல் லகிரி,

புகழ்பெற்ற ஹவுரா பாலத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்.

இதன்போது பிறிதொருவரைக் கொண்டு, இரும்புச் சங்கிலியால் கட்டி, சாஞ்சல் லகிரி நதியில் இறக்கப்பட்டார். அவருடைய கை, கால்கள் என்பன, கயிறு மற்றும் இரும்புச் சங்கிலியால் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தன.

அடுத்த சில நிமிடங்களில் சங்கிலிக் கட்டுகளை அறுத்துக்கொண்டு ஆற்றுக்கு மேலே வருவேன் என அறிவித்து இந்த ஆபத்தான சாகசத்தில் சாஞ்சல் லகிரி இறங்கினார். இதுபோன்ற பல சாகசங்களை செய்து அவர் ஏற்கனவே அசத்தியிருந்தார்.

இந்த நிலையில், நீண்ட நேரமாகியும் சாஞ்சல் லகிரி, ஆற்றுக்கு மேலே வரவில்லை. இதனால் அவரை எதிர்பார்த்து பாலத்துக்கு மேலே காத்திருந்த அவரது பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அப்பகுதி காவல்துறையினரும், பிரதேசவாசிகளும் இணைந்து சாஞ்சல் லகிரியை மீட்பதற்கு துணை புரிந்தார்கள்.

நீண்ட நேர தேடுதல்களின் பின்னர், சாஞ்சல் லகிரி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஆற்றில் இறக்கப்பட்ட போது கை, கால்கள் என்பன, கயிறு மற்றும் இரும்பு சங்கிலிகளால் இறுக்கமாகக் கட்டப்பட்டமையினால், சாஞ்சல் லகிரியால் அவிழ்க்க முடியவில்லை.

இதன்காரணமாக சாஞ்சல் லகிரி பரிதாபமாகப் பலியானதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.