பழங்கால பயிர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ முடியும்

0

பழங்கால பயிர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ முடியும்

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு ஏற்ற கடினமான இரண்டு தாவர வகைகளை ஜெர்மனி விஞ்ஞானிகள் அடையாளம் கண்டனர்.

சுவிட்சர்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கற்பாசிகள் (Lichens) மற்றும் நீலப்பசும் பேக்டீரியா (Cyanobacteria) என்ற இரண்டு உயிரிகளாக இருப்பதால் இதில் ஆச்சர்யம் ஏதும்இல்லை.

இந்த ஆதிகால தாவரங்கள் அதில் உயிர்வாழ முடியுமா என பரிசோதனை செய்வதற்காக – கடுமையான சூரிய வெப்பம், வெப்ப நிலையில் ஏற்ற இறக்கங்கள், அதிக அளவிலான உலர்ந்த நிலை மற்றும் குறைவான காற்றழுத்தம் – போன்ற செவ்வாய் கிரகத்தின் சூழ்நிலைகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர்.

என்ன முடிவு கிடைத்தது? இந்தத் தாவர இனங்கள் உயிர் பிழைத்திருந்தது மட்டுமின்றி, ஒளிச் சேர்க்கை செய்தல் மற்றும் வழக்கமான தாவர செயல்பாடுகள் தொடர்ந்து நடக்கின்றன என்பதைக் கண்டறிந்தார்கள்.