பயங்கரவாதிகளின் தாயகம் பாகிஸ்தான் பிரிக்ஸ் தலைவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தாக்கு

0
பாணாவலியில் நிறைவடைந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோடியுடன் கைகோத்த பிரேசில் அதிபர் மிஷெல் டெமர், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா.

பனாஜி,அக்.17– நமது பொருளாதரத்துக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கும், தீவிரவாதத்தின் தாய்வீடாக இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
கோவாவில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கவுரை ஆற்றி வருகிறார். இந்த உரையின்போது அவர் கூறியதாவது:-–
நமது பொருளாதரத்துக்கு நேரடி அச்சுறுத்தலாக தீவிரவாதம் இருந்துவரும் நிலையில் இந்தியாவின் ஒரு அண்டைநாடு (பாகிஸ்தான்) தீவிரவாதத்தின் தாய்மடியாக விளங்கி வருவது கவலைக்குரியதாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள தீவிரவாத அமைப்புகள் இந்த தாய்மடியுடன் தொடர்புடையவாக உள்ளன. இந்த அச்சுறுத்தலை எதிர்த்து பிரிக்ஸ் நாடுகள் குரல் எழுப்ப வேண்டும்.
இந்தநாடு (பாகிஸ்தான்) தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதுடன், அரசியல் ஆதாயங்களுக்காக தீவிரவாதத்தை பயன்படுத்துவது சரிதான் என்றும் நியாயப்படுத்தும் மனபோக்கை ஆதரித்தும் வருகிறது. இந்த மனப்போக்கை கடுமையாக கண்டிப்பதுடன், பிரிக்ஸ் அமைப்பு வலிமையாக எதிர்த்து நின்றும் போராட வேண்டும்.
அமைதி, சீர்திருத்தத்தின் குரலாக பிரிக்ஸ் திகழ வேண்டும். தற்போதுள்ள கட்டமைப்பபிற்கு பலனளிக்கும் வகையில் சர்வதேச புதிய நிறுவனத்தை நிர்மாணித்துள்ளோம். 2030ம் ஆண்டிற்கான அதிக மதிப்பு கொண்ட வளர்ச்சி திட்டத்திற்கு பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி முக்கியத்துவம் இதனுடன் ஒத்து போகிறது.
நமது பொருளாதார ஒத்துழைப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது. இதற்கு தாய் வீடாக, இந்தியாவின் அண்டை நாடு திகிழ்கிறது. பயங்கரவாதம் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. இதற்கு இந்தியா கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. இதற்கு எதிராக கடுமையாகவும் உறுதியாகவும் நாம் போராட வேண்டும்.
இந்தியா சமீபத்தில் பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை அமல்படுத்தியது. இந்தியா வளர்ச்சிக்கும் பருவ நிலை மாற்றத்திற்கும் சமநிலையை கொண்டிருப்பதில் உறுதியாக உள்ளது.
இவ்வாறு மோடி பேசினார்.
முன்னதாக பிரதமர் மோடியை இலங்கை அதிபர் சிறிசேன சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மீனவர் பிரச்னை, பயங்கரவாதம், பொருளாதார ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.