பத்மினி பிக்சர்ஸ் B.R பந்துலு

0

26-07-1910 ஆண்டு பிறந்தவர் B.R பந்துலு. பள்ளி ஆசிரியராய் தன் வாழ்நாளைத் தொடங்கியவர் samsara nauke என்ற கன்னடப் படம் மூலம் நடிகரானார். எட்டு படங்கள் வரை நடித்தவர் 1957ல் தன் சொந்த நிறுவனமான பத்மினி பிக்சர்ஸ் ஆரம்பித்து, த்ங்க ரகசியம் மூலம் இயக்குநர் ஆனார்.பின் கிட்டத்தட்ட 50 படங்களை இயக்கியுள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்கள் தயாரித்து இயக்கியுள்ளார்.

இவர் நடித்த படங்களில் முக்கியமானவை நாம் இருவர், முதல் தேதி, ஸ்கூல் மாஸ்டர் (ஒரு பள்ளி ஆசிரியர் கதை)

இவர் இயக்கிய படங்கள்…

தங்கமலை ரகசியம், சபாஷ் மீனா, ஸ்கூல் மாஸ்டர், எங்கள் குடும்பம் பெரிசு, வீரபாண்டிய கட்டபொம்மன், குழந்தைகள் கண்ட குடியரசு,கப்பலோட்டிய தமிழன்,முரடன் முத்து, கர்ணன், ஆயிரத்தில் ஒருவன், எங்க பாப்பா, நாடோடி, ரகசிய போலீஸ்115, கிருஷ்ண தேவராயா(கன்னடம்), தேடி வந்த மாப்பிள்ளை, கடவுள் மாமா ஆகியவை ஆகும்.

வீர பாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் ஆகியோர் எப்படியிருந்தனர் என்பதை சிவாஜி வடிவில் நாம் அனைவரையும் உணர வைத்தவர் இவர். சிவாஜி கணேசன் இந்த பாத்திரங்களில் வாழ்ந்திருப்பார்.

கெய்ரோவில் நடந்த உலகப்பட விழாவில் சிறந்த நடிகராக சிவாஜி கணேசன் அவர்களும், சிறந்த படமாக வீரபாண்டிய கட்டபொம்மனும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்படம் உலகமெங்கும் உள்ள மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.

1958ல் ஸ்கூல் மாஸ்டர் ஆகில இந்திய சான்றிதழ் பெற்றது

தகுதிச் சான்றிதழ் சிறந்த தமிழ் படம் வீர பாண்டிய கட்டபொம்மன் (1959ல்)

குடியரசுத் தலைவர் வெள்ளிப் பதக்கம் சிறந்த தமிழ் படம் கப்பலோட்டிய தமிழன்.

08-10-1974 –  அமரர் ஆனார்