‘நீர் நிலைகளில் குப்பைகள் கொட்டுவதை முதலில் நிறுத்தவேண்டும்’ – அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்!

0
71

‘நீர் நிலைகளில் குப்பைகள் கொட்டுவதை முதலில் நிறுத்தவேண்டும்’ – அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்!

தமிழ்நாடு முழுக்க கனமழை பெய்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அமைச்சர் மற்றும் தா.மோ அன்பரசன் ஆகியோர் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்தனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து உபரி நீர் வெளியேற்றம், மற்றும் செட்டர்கள் குறித்து அதிகாரியிடம் அமைச்சர் துரைமுருகன் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு அலர்ட் அல்லது ஆப்பிள் அலர்ட் என என்ன எச்சரிக்கை விட்டாலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது” என நகைச்சுவையாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “நீர்நிலைகளில் குப்பை கொட்டுவது தொடர்ந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமல்ல, பாலாற்றில் கூட குப்பை கொட்டப்படுகிறது.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல நீர் நிலைகளில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனை முதலில் நிறுத்தவேண்டும். மக்கள் மட்டுமல்ல அதிகாரிகளும் இதில் ஈடுபடுகிறார்கள்.தண்டலம் சவிதா கல்லூரியில் இருந்து கழிவு நீர் கொட்டப்பட்டு வந்தது.அதனை தடுத்து நிறுத்தினால் நீதிமன்றத்தை நாடுகிறார்கள்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றால் 100 பேரை என் வீட்டு அனுப்புகிறார் அந்த தொகுதி எம்.எல்.ஏ.ந மது வாக்கு,நமது தொகுதி என்று பார்க்காமல் பணியாற்ற வேண்டும். அந்த வகையில் நான் என் மனசாட்சியோடு பணியாற்றுகிறேன்” என்று கூறினார்.