நான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகன்: கிரிக்கெட் வீரர் தோனி

0

பாலிவுட்டில் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ‘MS தோனி’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியிருக்கிறது. இப்படம் தமிழிலும் வெளியாகிவிருக்கிறது. இப்படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற செப்டம்பர் 30-ந் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

20160923192146_img_0509

20160923192220_img_0517 20160923192309_img_0524 20160923192310_img_0525இந்நிலையில், இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ‘MS தோனி’ படக்குழு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் தோனி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, சென்னை என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான ஒன்று. சென்னையில் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் டெஸ்ட் விளையாட்டை தொடங்கினேன். எனக்கு சென்னையை ரொம்பவும் பிடிக்கும். பிரியாணி, பில்டர் காபி, காரமான உணவு வகைகள் சென்னையில் எனக்கு பிடித்தமான உணவுகள்.

14440855_1442699805746135_5962975829473606233_n 14470586_1442699742412808_6081888773845745971_n

நான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகன். எத்தனையோ முறை சென்னை வந்திருக்கிறேன். ஆனால், இதுவரை அவரை பார்க்க முடியாமலேயே இருந்து வந்தது. இன்று மாலை அவரை சந்திக்க செல்கிறேன். அவரை சந்திக்கப் போவது எனக்கு உற்சாகத்தை அளித்துள்ளது என்றார்.

அதன்பின்னர், ‘தோனி’ படக்குழுவினருடன் ரஜினி இல்லம் நோக்கி புறப்பட்டார் தோனி. ரஜினிக்கு சால்வை கொடுத்து அவருக்கு வாழ்த்து கூறினார் தோனி. பின்னர், தன்னுடைய பெயரில் உருவாகியுள்ள ‘எம்.எஸ்.தோனி’ படம் குறித்து ரஜினியிடம் பேசினார்.

ரஜினியும் அந்த படம் குறித்த தகவல்களை கிரிக்கெட் வீரர் தோனியிடம் கேட்டு அறிந்து கொண்டார். அந்த படத்தில் தன்னுடைய வேடத்தில் நடிக்கும் நடிகர் ராஜ்புத்தையும் ரஜினிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் தோனி.