நவம்பர் 12 – உலக நுரையீரல் அழற்சி தினம்

0

நவம்பர் 12 – உலக நுரையீரல் அழற்சி தினம்

உலக நுரையீரல் அழற்சி நாள் (World Pneumonia Day) என்பது நுரையீரல் அழற்சிநோய் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் ஆண்டு தோறும் நவம்பர் 12 ஆம் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வரும்ஒரு சிறப்பு நாள் ஆகும்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நலனைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நூற்றுக்கும் அதிகமான உலகளாவிய அமைப்புகள் இணைந்து 2010 முதல் இது நவம்பர் 12 ஆம் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
நியூமோனியா – நுரையீரல், தொற்று மூளை சவ்வு பாதிப்பு, ரத்தத்தில் நோய் கிருமிகள் கலப்பு, காதில் நோய் பாதிப்பு, சைனஸைடிஸ் போன்ற வகை கொண்டது.

பச்சிளம் குழந்தை, குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இருக்கும் வளர்ச்சியடையாத நுரையீரல், குறுகிய மூச்சுக்குழல், ஊட்டச்சத்து பற்றாக்குறை, வளர்ச்சியடையாத நோய் எதிர்ப்பு மண்டலம் போன்ற காரணங்களால், இத்தகைய தொற்றுநோய் ஏற்படுவதாக மருத்துவச் செய்தி கூறுகின்றது.