நவகிரக கோட்டையில் சிறப்பு வேள்வி வழிபாடு

0
121

நவகிரக கோட்டையில் சிறப்பு வேள்வி வழிபாடு

பல்லடம்: பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில், நேற்று ஆடி அமாவாசை கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு, சிறப்பு வெள்ளி வழிபாடு நடந்தது.

கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்று, வேள்வி வழிபாட்டை நடத்தினார். விநாயகர், நவகிரகம், சிவன், மற்றும் பார்வதி உள்ளிட்ட தெய்வங்களுக்கு வழிபாடு நடந்தது. உலகையே அச்சுறுத்தி வரும், கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. விநாயகர், நவக்கிரகம், மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தம்பதி சமேதராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சமூக இடைவெளியுடன் குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.