நடைமேம்பாலத்தின் நடுவில் சிக்கிய AIR INDIA விமானம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

0
8

நடைமேம்பாலத்தின் நடுவில் சிக்கிய AIR INDIA விமானம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

டெல்லியில் மேம்பாலத்தின் அடியில் விமானம் ஒன்று சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லி – குருகிராம் நெடுஞ்சாலையில் நடைமேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் அடியில் ஏர் இந்தியா விமானம் சிக்கிக் கொண்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

எப்படி இந்த விமானம் பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்டது என தெரியாமல் முதலில் நெட்டிசன்கள் குழப்படைந்து வந்தனர். இந்நிலையில் இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

அதில், “இந்த விமானத்தை நாங்கள் விற்றுவிட்டோம். மேலும் அது பழைய விமானம். இந்த விமானத்தை கனகர வாகனத்தில் எடுத்துச் செல்லும் போது நடைமேம்பாலத்தில் சிக்கியுள்ளது” என தெரிவித்துள்ளது. மேலும் யாருக்கு விற்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து டெல்லி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “இந்த விமானம் டெல்லி விமான நிலையத்தின் கடற்படைக்குச் சொந்தமானது அல்ல. இது ரத்து செய்யப்பட்ட விமானம். இதை விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்லும் போது இந்த தவறு நடந்திருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.