நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

0
6

நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

சென்னை: நடிகர் விவேக் இன்று காலை சினிமா பட்டபிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது உடனடியாக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விவேக் நேற்றுதான் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முக கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள் எனத் தெரிவித்து இருந்தார்.