நடிகர் விஜயின் கருத்திற்கு வானதி சீனிவாசன் கொடுத்த பதிலடிக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு..!

0

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்பதாகத் தெரிவித்த நடிகர் விஜய், எனினும் மக்கள் சந்தித்து வரும் சிரமங்கள் வேதனை அளிப்பதாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவருக்கு பதிலடி கொடுத்துள்ள வானதி சீனிவாசனின் கருத்திற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழும்பியுள்ளன.

மோடியின் நடவடிக்கை குறித்து, இன்று காலை பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய நடிகர் விஜய், கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்பதாகத் தெரிவித்தார். இது மிகவும் துணிச்சலான முயற்சி என்று பாராட்டு தெரிவித்துள்ள அவர், இந்த முயற்சி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் கூறினார்.

எனினும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், பெரும்பாலான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள 20 சதவீத பணக்காரர்களில் ஒரு சில சதவீதத்தினர் செய்யும் தவறுக்காக 80 சதவீத ஏழைகள் பாதிக்கப்படுவது வருத்தம் அளிக்கும் விஷயம் என்றும் விஜய் தெரிவித்தார்.

மருந்து வாங்க பணம் இன்றியும், திருமணம் நடத்த முடியாமலும் மக்கள் சந்தித்த சிரமங்களைக் கேள்விப்பட்ட போது, மிகுந்த வேதனை அடைந்ததாக அவர் கூறினார். முடிவை அறிவிக்கும் முன்பாக, இன்னும் சிறப்பாக திட்டமிட்டிருந்தால், பாதிப்பை குறைத்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், நிலைமை சீரடைந்து வருவது ஆறுதல் அளிப்பதாக விஜய் தெரிவித்தார்.

வானதி சீனிவாசனின் பேச்சு:

விஜயின் இந்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக பாஜகவின் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், நாட்டு மக்களின் பிரச்னைகளை சரி செய்ய மோடி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கறுப்புப் பணத்தை ஒழிப்பற்கு மோடி எடுத்துள்ள நடவடிக்கையை நாட்டு மக்கள் மனதாரப் பாராட்டுகிறார்கள் என்றும் ‘பேத்தி கல்யாணத்துக்கு பணம் இல்லாததால் ஒரு பாட்டி இறந்து விட்டார், அன்றாட செலவுகளுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்’ என்று ஏழை, எளிய மக்கள் மீது கரிசனம் காட்டும் அரசியல்வாதிகளுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் தாங்கள் வைத்துள்ள பணத்தில் தங்கள் வாழ்க்கைக்கு தேவையானது போக மீதியை ஏழை மக்களின் ஜன்தன் வங்கி கணக்கில் போட்டால் ஏழை மக்களின் வேதனை, துயரம் போக்க உதவிகரமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

இளையதளபதி விஜய் தான் ” கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ” மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த முதல் இந்திய நடிகர்