நடிகர், டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்

0

நடிகர், டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்

“கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற படத்தில் நடத்த மருத்துவர் சேதுராமன் மாரடைப்பால் நேற்றிரவு காலமானார்,

நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடிப்பில், கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற திரைப்படம் 2013-ம் ஆண்டு வெளியாகி சக்கைப் போடு போட்டது. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன்.

தோல் மருத்துவரான இவர், கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்திற்குப் பின்னர் தமிழில் வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சென்னையில் பணியாற்றி வந்த இவர், மாரடைப்பின் காரணமாக நேற்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு உமா என்பவரோடு திருமணம் நடைபெற்றது.

இளம் வயதில் சேதுராமன் உயிரிழந்தது திரைத்துறையினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் சேதுராமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.