நடிகர் சதீஷூக்கு விரைவில் கெட்டி மேளம்….. வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்

0

நடிகர் சதீஷூக்கு விரைவில் கெட்டி மேளம்…..  வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்

தமிழ் திரையுலகில் காமெடியனாக வலம் வருபவர் சதீஷ். இவர் விஜய்யுடன் கத்தி, பைரவா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் இவர் தொடர்பாக பல்வேறு வதந்திகளும் பரவி வந்தன. குறிப்பாக திருமணம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திரையுலகை சேர்ந்த பிரபலம் ஒருவரின் மகளை அவர் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இது காதல் திருமணம் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.