நடிகர் எஸ்.வி.சேகரின் உடன்பிறந்த தம்பி மனைவி கிரிஜா வைத்தியநாதன் நியமனம் குறித்து ஊடகங்களில் உலா வரும் தகவல்கள்

0
நடிகர் எஸ்வி.சேகரின் உடன்பிறந்த தம்பி மனைவி கிரிஜா வைத்தியநாதன்

நடிகர் எஸ்.வி.சேகரின் உடன்பிறந்த தம்பி மனைவி கிரிஜா வைத்தியநாதன் நியமனம் குறித்து ஊடகங்களில் உலா வரும் தகவல்கள்

சென்னை: ராம மோகன ராவ் இடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

1981ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், ஐஐடியில் முனைவர் பட்டம் பெற்றவர்.

இவரது நியமனம் குறித்து ஊடகங்களில் பல்வேறு வகையான செய்திகள் உலா வருகின்றன.

அதாவது, கிரிஜா வைத்தியநாதன், பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகரின் தம்பி மனைவியாவார். இந்த பின்னணியை மட்டும் எடுத்துக் கொண்டு, கிரிஜா வைத்தியநாதன் மூலமாக, தமிழக அரசின் நடவடிக்கைகளை பாஜக கைப்பற்ற நினைப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, தமிழக அரசில் பாஜக தலைமையிலான மத்திய அரசு தலையிட முயற்சிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள், எஸ்வி சேகரின் உறவினர் என்ற ஒரே காரணத்துக்காக தற்போது கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு ஊடகங்களில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

ஆனால், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளும், கிரிஜா வைத்தியநாதன் குறித்து பேசும் போது, மிகச் சரியான நபரை தமிழக அரசு தேர்வு செய்திருப்பதாகக் கூறுகின்றனர்.

மேலும், ஐஏஎஸ் அதிகாரிகளிலேயே மிகவும் மூத்தவரும், ஏராளமான முக்கியத் துறைகளில் அனுபவம் நிறைந்தவராகவும் இருக்கும் கிரிஜா வைத்தியநாதன், இப்பதவிக்கு மிகச் சரியானவர் என்று கூறுகிறார்கள்.

பணியில் அப்பழுக்கற்றவரும், மிகச் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவருமாக கிரிஜா வைத்தியநாதன் விளங்குவதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், திமுக, அதிமுக என எந்த கட்சிப் பின்னணியும் இல்லாதவர் கிரிஜா வைத்தியநாதன் என்றும் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள் தகவல் அறிந்தவர்கள்.