தொலைக்காட்சி மெகா சீரியல்  ‘இது நம்ம ஆளு’ – விமர்சனம்

0

முறிந்த காதல்களால் திருமணத்தில் பிரச்னை ஏற்பட்டதா? என்பதைச் சொல்லும் படம் இது நம்ம ஆளு.

சிம்பு ஐடி கம்பெனியில் வேலை செய்து கை நிறைய சம்பாதித்து நண்பன் சூரியுடன் வசிக்கிறார். ஆன்ட்ரியாவை பார்த்தவுடன் காதலிக்க தொடங்க பெற்றோர்கள் சம்மதம் வாங்கும் நேரத்தில் ஆன்ட்ரியாவின் தந்தையின் குறுக்கீட்டால் காதல் முறிகிறது. இதனால் விரக்தியில் இருக்கும் சிம்புவிற்கு திருவையாறில் நயன்தாராவை பெண் பார்க்க ஏற்பாடு செய்கிறார் சிம்புவின் தந்தை ஜெயபிரகாஷ். அங்கே சென்றவுடன் நயன்தாராவை பிடித்துப் போக திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார். சிம்புவின் பழைய காதல் லீலைகளை பற்றி தெரிந்து கொள்ளும் நயன்தாரா சிம்புவிடம் நைசாக பேசி தகவல்களை தெரிந்து கொள்கிறார். பின்னர் நயன்தாரா சிம்புவை திருமணம் செய்தாரா? அல்லது வேறு காரணங்களால் திருமணம் தடைபட்டதா? என்பதைச்சொல்லும் கதை இது நம்ம ஆளு.

சிவாவாக சிம்பு நடிப்பில் அடக்கி வாசிச்சிருக்கிறார். முகபாவனையால் காதல் காட்சிகளிலும் சரி, உரையாடல்களிலும் சரி தன்னைப்பற்றிய நையாண்டி கமெண்ட்களுக்கு கவலைப்படாமல் பதிலடி கொடுத்து  ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்துள்ளார். சிம்பு நயன்தாரா ஜோடி – அங்கிள்-ஆன்ட்டி லுக்…

நயன்தாரா மயிலா என்ற கதாபாத்திரத்தில், ஆன்ட்ரியா சிம்புவின்காதலி ப்ரியாவாக தோன்றும் இருவரும்  முத்தின கத்திரிக்காய். இருவரிடம்  இளமை இல்லை.

சிம்புவின் நண்பனாக வரும் சூரி கொடுக்கும் ஒவ்வொரு கவுண்ட்டர் வசனங்கள் படத்தின் ஹைலைட் மட்டுமல்ல கை தட்டல் பெறுகிறார் சூரி.

மற்றும் ஜெயபிரகாஷ், உதய் மகேஷ், மதுசூதனன், அர்ஜுனன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் சந்தானம் படத்தின் பக்க மேளங்கள்.

பாலசுப்பிரமணியம்மின் தெளிவான கலர்பூல் ஒளிப்பதிவு
தென்பட வில்லை.

குறளலரசனின் பின்னணி இசை படத்திற்கு மைனஸ் மட்டுமல்ல பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் தான்.

இயக்கம்-பாண்டிராஜ். பழைய காதலால் தடைபடும் திருமணம் என்ற சிம்பிளான கதையை எடுத்து வெளியிட இத்தனை தாமதம். ஏற்கனவே சிம்பு-நயன் ஜோடி பழைய காதலர்கள், கதையும் ஜவ்வு போல் இழுத்து காதலர்கள் நடித்து முடிப்பதற்குள் இது அங்கிள்-ஆன்ட்டி காதல் கதை போல் ஆகிவிட்டது. இவர்களின் பழைய காதல் புராணத்தை பட்டியலிடவும், உரையாடவும் தான் படம் எடுத்தார்களா? அல்லது பழைய காதலை சேர்த்து வைக்க படம் எடுத்தார்களா? இதில் எதில் தோல்வி கண்டார்கள் என்பது இயக்குனர் பாண்டிராஜிற்கே வெளிச்சம். ஆண்ட்ரியாவை ஏன் சிம்பு பிரிந்தார் என்பதற்கும் வலுவான காரணங்கள் இல்லை. நயன்தாராவை  ஏன் விழுந்து விழுந்து ஏன் காதலிக்கிறார் என்று புரியவில்லை.தெரிந்த கதை, தேவையற்ற பாடல், இழுவையான செல்போன் உரையாடல்கள், காரணமேயில்லாத சண்டைகளால் பிரியும் காதலர்கள், தெளிவில்லாத திரைக்கதை என்று படம் முழுவதும் பொறுமையை சோதித்தாலும் சிம்புவின் நடிப்பும், சூரியின் காமெடியும் கொஞ்சம் அலுப்பை மறக்கச் செய்கிறது. இயக்குனர் பாண்டிராஜ் இது போன்ற சோதனைகளை தந்து முயற்சிக்காமல் இருப்பது நலம்.

மொத்தத்தில் தொலைக்காட்சி மெகா சீரியல் பாணியில் இது நம்ம ஆளு. ரசிகர்களுக்கு பொறுமையை சோதிக்கிற அறுவையான ஆளு.