தேனி அரசு மருத்துவமனைக்கு தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழகம் வழங்கிய 3 ரோபோக்கள்

0

தேனி அரசு மருத்துவமனைக்கு தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழகம் வழங்கிய 3 ரோபோக்கள்

கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு பணிகளுக்காக

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழகம் வழங்கிய 3 ரோபோக்கள்:

தேனி அரசு மருத்துவமனைக்கு வழங்கினார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தேனி, மே.17–

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாவட்ட கலெக்டர் ம.பல்லவி பல்தேவ் முன்னிலையில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு பணிகளுக்காக தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்பட்ட 3 ரோபோக்களை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கத்தினை கட்டுப்படுத்திட அரசால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளில் தன்னார்வலர்களும் பொதுமக்களுக்கு உதவும் அடிப்படையில் பிரதமர் நிவாரண நிதி, முதலமைச்சர் நிவாரண நிதி ஆகியவைகளின் மூலம் நிதியுதவி மற்றும் மருத்துவ உபகரணங்கள், உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் ஆகியவைகளை வழங்கி வருகின்றனர். அதில், தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தற்போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய, மாநில அரசுகளுடன் சேர்ந்து பல்வேறு நற்பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.11 1/4 கோடி தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.1 1/4 கோடியும் வழங்கியும் முககவசங்கள், கிருமிநாசினி வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகிறது.

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக தொழில் முனைவோருக்கான வளர்ச்சி மையத்தில் உறுப்பினராக உள்ள திருச்சியை சேர்ந்த ப்ரொபெல்லெர் டெக்னாலஜி என்கின்ற அமைப்பு 3.2 கிலோ உடைய ரோபோக்களை தயார் செய்து வருகிறது. இந்த அமைப்பினுடைய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட “சஃபி கோ” எனும் பல்வகை பணிகளைச் செய்யகூடிய ரோபோ மூலம் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு அரசு மருது்துமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருத்துவ பணியாளர்கள் அருகில் சென்று பொருட்களை வழங்குவதற்கு பதிலாக, இதன் மூலம் உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள் வழங்கிட ஏதுவாக இருக்கும்.தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தற்போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக, தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கும், திருச்சி மருத்துவக்கல்லூரிக்கும் மதுரை தலைமை பொது மருத்துவமனைக்கும் தலா 3 ரோபோக்களை வழங்கி உள்ளது. அதன்தொடர்ச்சியாக, தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கும் 3 ரோபோக்களை வழங்கி உள்ளது. இந்த ரோபோவின் உதவியுடன் மருத்துவர்களும் மற்றும் பணியாளர்களும் நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயளிகளிடம் நெருங்கிச் சென்று செயல்படாமல், தூரத்திலிருந்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து பொருட்களை வழங்கிட முடியும்.

நோயாளிகளும் தங்களுக்கு வேண்டிய தகவல்களை அந்த ரோபோக்களில் உள்ள கேமராக்கள் மூலம் பதிவு செய்து அனுப்பவும் வழிவகை உள்ளது. மருத்துவர்களும் செவிலியர்களும் கூட நோயாளிகளுக்கு தாங்கள் சொல்ல விரும்புகின்ற தகவல்களை வாய்மொழியாக பதிவு செய்து அத்தகவல்களை நோயாளிகளிடம் இவ்வகை ரோபோக்கள் மூலம் கொண்டு சேர்க்க முடியும். இதுபோன்ற கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டு, சேவை புரிந்து வரும் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசின் சார்பில் வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ள 3 ரோபோக்களை தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு. ப.ரவீந்திரநாத்குமார், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக முதல்வர் வி.பத்திரிநாத், பெரியகுளம் சார் ஆட்சியர் செல்வி டி.சிநேகா, தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை முதல்வர் மரு.இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.