தீபாவளி சிறப்பு காட்சிக்கு அனுமதி தரப்படவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ

0

தீபாவளி சிறப்பு காட்சிக்கு அனுமதி தரப்படவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ

விஜய்-நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25-ந் தேதி பிகில் படம் திரைக்கு வருகிறது. இதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி படமும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.

தீபாவளிக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், பெரும்பாலான திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கப்படாமல் இருந்தது. குறிப்பாக தீபாவளி சிறப்பு காட்சி திரையிடப்படுமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், தீபாவளியையொட்டி வெளியாகும் பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு இதுவரை அனுமதி தரப்படவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதனை மீறி சிறப்பு காட்சி திரையிட்டால் சம்பந்தப்பட்ட தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.