திரைத்துறையில் சாதித்தவர்கள் பலர் இருந்தும், வேண்டப்பட்டவர் என்பதால் ரஜினிக்கு விருது – சீமான்

0

திரைத்துறையில் சாதித்தவர்கள் பலர் இருந்தும், வேண்டப்பட்டவர் என்பதால் ரஜினிக்கு விருது – சீமான்

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், திருவள்ளுவர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார். அதில், மருத்துவர்களின் கோரிக்கை நியாயமானது. அவர்கள் மீதான நடவடிக்கை என்பது தமிழக அரசின் மோசமான நடவடிக்கை. அரசு இத்தகைய போக்கை கைவிட வேண்டும்.

ரஜினிக்கு விருது கொடுத்ததை பாராட்டுகிறேன். ஆனாலும் அவரை விட திரைத்துறையில் சாதித்த கமல்ஹாசன், இளையராஜா, பாரதிராஜா, உள்ளிட்டோர் திரைத்துறையில் இருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் அவர்களுக்கு வேண்டப்பட்டவர் என்பதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளுவருக்கு காவி அணிவித்து பொதுமறையை மறந்து தன்வயப்படுத்த நினைக்கின்றனர்; வள்ளுவரை இழிவுப்படுத்தினால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்