திருப்பதி பிரதான உண்டியலில் 500, 1000 நோட்டுகள் காணிக்கை: 4 நாள் உண்டியல் வருமானம் ரூ.10 கோடியே 42 லட்சம்

0

திருமலை: இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பழைய 500, 1000 நோட்டுகளை பிரதான உண்டியலில் காணிக்கையாக செலுத்தலாம் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி பக்தர்கள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

கடந்த 8-ந்தேதி உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 38 லட்சமும், 9-ந்தேதி ரூ.2 கோடியே 76 லட்சமும், 10-ந்தேதி ரூ.2 கோடியே 28 லட்சமும், 11-ந்தேதி ரூ.3 கோடி என ஆக மொத்தம் கடந்த 4 நாள் வருமானமாக ரூ.10 கோடியே 42 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.