திருச்செந்தூரில் அரோகரா கோஷங்களுக்கு இடையே சூரனை வதம் செய்த முருகர்

0

திருச்செந்தூரில் அரோகரா கோஷங்களுக்கு இடையே சூரனை வதம் செய்த முருகர்

திருச்செந்தூர்: ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் சஷ்டி விரத்தத்தின் இறுதி நாளன்று அனைத்து முருகன் ஆலயங்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். புராணங்களின் படி சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நடைபெற்றது என்பதால், மற்ற திருத்தலங்களை விட திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் வெகு விமர்சையாக நடைபெறும்.

எப்போதும் போல, இந்த ஆண்டும் சூரசம்ஹாரத்தை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் கடற்கரையில் இன்று குவிந்தனர். பக்தர்களின் அரோகரா கோஷம் விண்னைப்பிளக்க திருமுருகப்பெருமானின் வேலானது சூரபத்மனின் தலையை எடுத்து வதம் செய்தது.

ஒரு வார காலம் விரதமிருந்த பக்தர்கள் சம்ஹார காட்சியை கண்குளிர கண்டு முருகனை மனமுருகி தரிசித்து, தங்களது விரதத்தை முடித்துக்கொண்டனர்.