தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

0
The Prime Minister, Shri Narendra Modi and the Prime Minister of Japan, Mr. Shinzo Abe in a bilateral meeting, on the sidelines of 16th India-ASEAN Summit, in Bangkok, Thailand.

தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

பாங்காங், இந்தியாவில் முதலீடு செய்ய உகந்த நேரம் இது என்று தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இந்தியா-–ஆசியான் உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதைப்போல கிழக்கு ஆசிய உச்சி மாநாடு மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகள் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இடையேயான பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையும் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று பாங்காக் போய் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான இந்தியர்களும் கலந்து கொண்டு பிரதமரை அன்போடு வரவேற்றனர்.

The Prime Minister, Shri Narendra Modi with the leaders of other ASEAN countries, at the 16th ASEAN-India Summit, in Bangkok, Thailand.

இதைத்தொடர்ந்து பாங்காக் தேசிய உள்விளையாட்டு அரங்கில் குழுமியிருந்த இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:–-
பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு பின்னால் இருந்த மிகப்பெரும் காரணத்தை (காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து) இந்தியா அழித்து விட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு முடிவு சரியாக இருந்தால், அது உலகம் முழுவதும் எதிரொலிக்கும். அந்தவகையில் தாய்லாந்திலும் அதை நான் கேட்கிறேன்.

The Prime Minister, Shri Narendra Modi addressing the 16th ASEAN-India Summit, in Bangkok, Thailand.

முடியாதது என்று கருதப்படுபவற்றை செய்து முடிக்கும் வகையில் எனது அரசு உழைத்து வருகிறது. சிறப்பாக பணியாற்றுவோர் மீது மக்கள் அதிகப்படியான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர்.

கர்தார்பூர் வழித்தடம் வருகிற 9-ந்தேதி திறக்கப்படுகிறது. இதன் மூலம் கர்தார்பூர் குருத்வாராவுக்கு பக்தர்கள் தடையின்றி சென்று வரமுடியும்.
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் எங்கள் அரசு ஏற்படுத்திய மாற்றங்களால்தான், மீண்டும் மிகப்பெரிய பெரும்பான்மையை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர்.

The Prime Minister, Shri Narendra Modi and the Prime Minister of Japan, Mr. Shinzo Abe in a bilateral meeting, on the sidelines of 16th India-ASEAN Summit, in Bangkok, Thailand.

ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவதையே இலக்காக கொண்டு அதற்காக கடுமையாக உழைத்து வருகிறோம். அந்தவகையில் புதிய இந்தியாவை கட்டமைத்து வருகிறோம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

முன்னதாக, பாங்காக்கில் நடந்த ஆதித்யா பிர்லா குழுமத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றார். அதில், தாய்லாந்து நாட்டில் உள்ள ஏராளமான முதலீட்டாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், உலக முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:–
இந்தியாவில் வழக்கமான நிர்வாக முறை, அதிகாரிகள் நடத்தும் நிர்வாக முறை அனைத்தும் நிறுத்தப்பட்டு, தற்போது முதலீட்டாளர்களுக்கு ஏற்ற உருமாற்றங்களை நோக்கி நகர்ந்து வருகிறோம். உலகளவில் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய ஏற்ற நாடாக இந்தியா விளங்கி வருகிறது. இந்தியாவில் கடினமாக உழைத்து அரசுக்கு வரிசெலுத்தும், வரிசெலுத்துவோர் மதிக்கப்படுகிறார்கள். அன்னிய நேரடி முதலீடு, எளிதாகத் தொழில் செய்தல், எளிதாக வாழ்தல் தரம் உயர்ந்திருக்கிறது.
இவ்வாறு மோடி கூறினார்.

The Prime Minister, Shri Narendra Modi meeting the President of Indonesia, Mr. Joko Widodo, on the sidelines of the 16th India-ASEAN Summit, in Bangkok, Thailand.

கடந்த 2012-ம் ஆண்டு கம்போடியாவின் நாம்பென்னில் நடந்த ஆசியான் உச்சி மாநாட்டின்போது தொடங்கிய பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பாங்காக்கில் நாளை நடைபெறும் கூட்டத்தில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டால் ஆசியான் அமைப்பு உறுப்பு நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே தடையில்லா வர்த்தகத்துக்கு வாய்ப்பு ஏற்படும். உலக மக்கள் தொகையில் சுமார் சரிபாதி பேர் இந்த நாடுகளில் வசித்து வருவதால், உலகிலேயே மிகப்பெரிய தடையில்லா வர்த்தக பிராந்தியமாக இது அமையும் என கூறப்படுகிறது.