தவெக மாநாட்டில் தவெக தலைவர் விஜய் சொன்ன குட்டிக்கதை!
தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பேசிய விஜய் , தனது வழக்கமான பாணியில் குட்டிக் கதை கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் தனது 45 நிமிட பேச்சில் ஒரு குட்டிக்கதை சொல்லி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அவர் சொன்ன குட்டிக்கதை வருமாறு:- அதாவது, ஒரு நாட்டுல பெரிய போர் வந்ததாம்.. அதிகாரமிக்க தலைமை இல்லாததால் சிறு குழந்தையின் கையில் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்ததாம். அதனால் அந்த நாட்டுல இருந்த பெரும் தலைவர்கள் பயத்தில் இருந்தார்களாம். அந்த சிறு குழந்தை நாட்டின் படையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ‘போர்க்களம் போகலாம்’ என சொன்னதாம். அப்போது அந்த பெருந்தலைவர்கள், நீ சிறு குழந்தை என்றெல்லாம் சொன்னார்களாம்.
களத்தில் அவங்கள சந்திக்கிறது எல்லாம் சாதாரணம் கிடையாதுப்பா.. சொன்னா கேளுப்பா.. இது ஒன்னும் விளையாட்டு இல்ல.. நீ பாட்டுக்கு குடுகுடுனு போயிட்டு வீட்டுக்கு வர்றதுக்கு. போர் என்றால் படையை நடத்த வேண்டும். முக்கியமாக களத்தில இருக்கிற எதிரிகள் எல்லாத்தையும் சமாளிச்சு தாக்குப்பிடிக்கனும்.
எப்படி நீ ஜெயிப்ப.. என்று பெரிய தலைகள் எல்லாம் கேட்டார்கள். அப்போது அந்த சின்னை பையன் எந்த பதிலும் சொல்லாமல், போருக்கு தனியாக தன் படையுடன் சென்றான். அந்த பாண்டிய வம்சத்தை சேர்ந்த பையன் என்ன செஞ்சான்னு தெரியுமா?.. சங்க இலங்கியத்துல இருக்கு பாருங்க.. படிக்காதவங்க சங்க இலக்கியத்தை படித்து தெரிஞ்சுக்கோங்க.. படித்தவர்களிடம் கேட்டு தெரிஞ்சுக்கோங்க… ஆனால்.. கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன்.
இவ்வவாறு விஜய் பேசினார்.