தர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு : சென்னை போலீஸ் கமிஷனரிடம் லைகா சார்பில் புகார்!

0

தர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு : சென்னை போலீஸ் கமிஷனரிடம் லைகா சார்பில் புகார்!

தர்பார் பற்றி அவதூறு பரப்பிய நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்ககோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் லைகா சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 அன்று உலகம் முழுக்க ரஜினி நடிப்பில்  வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் தர்பார் படம் திரையிடப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என வினியோகஸ்தர்கள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

அதில் தமிழகத்தில் 17 கோடி ரூபாயும், ஆந்திராவில் 7 புள்ளி 5 கோடி ரூபாயும் என இந்தியாவில் மட்டும் முதல் நாள் வசூல் 40 கோடி ரூபாயை தொடும் என்று தெரிவிக்கின்றனர். இந்திய வசூலை தவிர்த்து அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், லண்டன் போன்ற வெளி நாடுகளின் வசூல் 15 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கணிக்கின்றனர்.

இந்நிலையில் நல்ல வரவேற்பு பெற்று ஒட்டிக்கொண்டிருக்கும் இந்தப் படம் பற்றி சில விரோதிகள் வாட்ஸ் ஆப்பில் அவதூறு பரப்பி வருகிரார்கள்.

ஒரு வாட்ஸ் ஆப் பதிவில் படத்தை முழுவதும் பகுதி பகுதியாக பிரித்து காட்சிகளாக அனுப்பி “இதில் முழுப்படமும் உள்ளது. கண்டு ரசியுங்கள்…. யாரும் தியேட்டரில் சென்று படத்தைப் பார்க்காதீர்கள். அவர்கள் நஷ்டம் அடைய வேண்டும்…” என்று அதனுடன் குரல் பதிவும் பரப்பப்பட்டு வருகிறது.

இதில் அதிர்ச்சி அடைந்த லைகா நிறுவனம் இது குறித்து இப்படி வதந்தி பரப்பியது யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மேல் கிரிமினல் நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனரிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இது குறித்த புகார் மனு ஒன்றும் போலீஸ் கமிஷனரிடம் கொடுக்கப்பட்டுள்ளது….

புகார் மனு….