தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது சட்ட நடவடிக்கை – ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை

0

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது சட்ட நடவடிக்கை – ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை

கமல்ஹாசனுக்கு ரூ.10 கோடி தந்ததாகவும், அந்த பணத்திற்கு தனது நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்து தருவதாக கமல்ஹாசன் வாக்களித்திருந்ததாகவும், ஆனால் கமல்ஹாசன் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை, படமும் நடித்து கொடுக்கவில்லை என்றும் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கமலுக்கு ரூ.10 கோடி கொடுத்ததற்கான ஆவணங்களையும், படம் நடித்து தருவதாக குறிப்பிட்டிருந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் புகாரை திரும்பப்பெற வேண்டும் என்றும், ஆதாரத்தை தர தவறும் பட்சத்தில் ஞானவேல்ராஜா மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.