‘தமிழினத்தை சாதியால், மதத்தால் பிரிக்க முயற்சி’ – முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

0
108

‘தமிழினத்தை சாதியால், மதத்தால் பிரிக்க முயற்சி’ – முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழினத்தை சாதியால் மதத்தால் சிலர் பிரிக்க முயற்சிக்கின்றனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”தமிழினத்தை சாதியால், மதத்தால் சிலர் பிரிக்க முயற்சிக்கின்றனர். மதம் என்பதும் சமய நம்பிக்கை என்பதும் தனிப்பட்ட விருப்பம். நம்மை பிளவுப்படுத்துவதன் மூலம் தமிழினத்தின் வளர்ச்சியை தடுக்க முயற்சி செய்கின்றனர். சதியை உணர்ந்து மக்கள் தெளிவு பெற வேண்டும். இஸ்லாமிய சிறுபான்மை மக்களுக்கு திமுக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளது. அனைவரும் தமிழர்கள் என்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.