தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்

தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா (வயது 88), வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார்.

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோசய்யா காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பியாக இருந்தவர். இவர், 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழகத்தின் ஆளுநராக பணியாற்றியுள்ளார். போலவே ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சராக 2009 முதல் 2010-ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.

வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐதராபாத்தில் ரோசய்யா காலமாகியுள்ளார். கடந்த 1933-ம் ஆண்டு பிறந்த இவர், தனது 88 -வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.