தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு: தமிழக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

0

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு: தமிழக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மையார் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் மரணச் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அரசியல் களத்தில் மாறுபட்ட கருத்துகள் கொண்டிருந்தாலும் ஜனநாயக நெறியிலேயே அதனை எதிர்கொண்டு வந்தோம் என்ற நிலையில், முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணம் தமிழகத்திற்கு பேரிழப்பாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துவதுடன், அவரை இழந்து தவிக்கும் அ.தி.மு.க.வின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும்,தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

– தளபதி மு. க. ஸ்டாலின் , தமிழக எதிர்க்கட்சித்தலைவர் மு. க. ஸ்டாலின்