தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலர் தாமோதரன் கொரோனாவுக்கு பலி

0

தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலர் தாமோதரன் கொரோனாவுக்கு பலி

சென்னை: முதல்வர் அலுவலக தனிச்செயலர் தாமோதரன் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கரோனா தொற்று பாதிப்பால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னையில் தான் நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் அலுவலக தனிச்செயலர் தாமோதரனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை தனிச்செயலர் தாமோதரன் உயிரிழந்தார்.

கொரோனா தொற்று பாதிப்புக்கு சென்னையில் புதன்கிழமை மட்டும் 28 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனைகளில் உயிரிழந்தனர்.