தமிழக சட்டசபை தேர்தல் 2021 : பாமக விரும்பும் 23 தொகுதிகள் எவை? – அதிமுகவிடம் பட்டியல் சமர்ப்பிப்பு

0
8

தமிழக சட்டசபை தேர்தல் 2021 : பாமக விரும்பும் 23 தொகுதிகள் எவை? – அதிமுகவிடம் பட்டியல் சமர்ப்பிப்பு

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், பாமக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அதிமுகவிடம் வழங்கப்பட்டது. பாமக தலைவர் ஜி.கே மணி, வடக்கு மண்டல துணை தலைவர் ஏ.கே மூர்த்தி, புதுச்சேரி அமைப்பாளர் தன்ராஜ், வழக்குரைஞர் கே.பாலு ஆகியோர் இந்த 23 தொகுதிகளை அதிமுக இறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதில், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாமக போட்டியிடும் தொகுதிகள் விருப்ப பட்டியல்

1 திருப்போரூர்

2 விக்கிரவாண்டி

3 செங்கல்பட்டு

4 சங்கராபுரம்

5 கும்மிடிப்பூண்டி

6 ஆரணி

7 பென்னாகரம்

8 காட்டுமன்னார்கோயில்

9 வீரபாண்டி

10 அணைக்கட்டு

11 ஓசூர்

12 நெய்வேலி

13 கலசபாக்கம்

14 பப்பிரெட்டிப்பட்டி

15 சோளிங்கர்

16 குன்னம்

17 திண்டிவனம்

18 பண்ருட்டி

19 திருத்தணி

20 ஜெயங்கொண்டம்

21 மேட்டூர்

22 ஆற்காடு

23 வேளச்சேரி