தமிழக சட்டசபை தேர்தல் : திமுக வேட்பாளர் பட்டியல் மார்ச் 10-ம் தேதி வெளியீடு?

0
10

தமிழக சட்டசபை தேர்தல் : திமுக வேட்பாளர் பட்டியல் மார்ச் 10-ம் தேதி வெளியீடு?

திமுக வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 10ம் தேதி வெளியிடப்படும் என, அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்களுக்கான நேர்காணல் ஆகிய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. NEXT அதேசமயம், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட முக்கிய கூட்டணி கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், திமுக வெளியிட உள்ள 10 ஆண்டுகளுக்கான லட்சிய பிரகடனத்தை, மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து ஸ்டாலின் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், வரும் 10ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக உடனான தொகுதிப் பங்கீடு நாளைக்குள் இறுதியாகும் என, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். சத்யமூர்த்தி பவனில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், திமுக உடனான பேச்சுவார்த்தை தொடர்வதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.