தமிழகம் முழுவதும் பதற்றம்: அனைத்து மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்களும் உஷார் நிலை

0

சென்னை, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்ட தகவலை சற்று நேரத்தில் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிக்கை மூலம் வெளியிட்டது. இந்த தகவல் உடனடியாக, செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானதால், தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை | அப்போலோ மருத்துவமனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினர் குவிந்தனர்.

அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பும் தொண்டர்கள் குவியத் தொடங்கினார்கள். உடனடியாக, அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட அதே நேரத்தில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கும் உயர் போலீஸ் அதிகாரிகள் வந்தனர். அதேபோல், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கும் கமிஷனர் ஜார்ஜ் உள்பட அனைத்து உயர் போலீஸ் அதிகாரிகளும் வந்தனர்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை | அப்போலோ மருத்துவமனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினர் குவிந்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை | அப்போலோ மருத்துவமனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினர் குவிந்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை | அப்போலோ மருத்துவமனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினர் குவிந்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை | அப்போலோ மருத்துவமனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினர் குவிந்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை | அப்போலோ மருத்துவமனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினர் குவிந்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை | அப்போலோ மருத்துவமனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினர் குவிந்தனர்.

உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்களுக்கும், டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து இரவோடு இரவாக உத்தரவு பறந்தது. அனைத்து எஸ்.பி.க்களும் உடனடியாக அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.மேலும், ‘ரெட் அலெர்ட்’ எனப்படும் உஷார் நிலையும் தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் எஸ்.பி.க்களுக்கு உத்தரவிடப்பட்டது.

சென்னை மாநகர் முழுவதும் இரவோடு இரவாக போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். முக்கிய இடங்களிலும் அதிக போலீசார் குவிக்கப்பட்டனர். இதேபோல், மத்திய போலீசாரும், துணை ராணுவமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.